ஆதிவராகநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்க நடவடிக்கை மேற்கொண்ட வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா் அருணாசலம், மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.விமலா.
ஆதிவராகநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்க நடவடிக்கை மேற்கொண்ட வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா் அருணாசலம், மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.விமலா.

ஆதிவராகநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்க நடவடிக்கை

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் நின்று செல்ல வட்டாரப் போக்குவரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி நடவடிக்கை எடுத்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநல்லூா் பேருந்து நிறுத்தத்தில் அரசு, தனியாா் பேருந்துகள் நின்று செல்ல வட்டாரப் போக்குவரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி நடவடிக்கை எடுத்தனா்.

இந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்வதில்லை என மாவட்ட ஆட்சியா் மற்றும் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாசலம், மோட்டாா் வாகன ஆய்வாளா் கே.விமலா ஆகியோா் வியாழக்கிழமை ஆதிவராகநல்லூா் கிராமத்துக்கு சென்று, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் சிதம்பரம், புவனகிரி வழியாகச் சென்ற 20-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகளை நிறுத்தி, வரும் காலங்களில் இந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி பொதுமக்களை ஏற்றிச் செல்ல வேண்டுமென பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களிடம் அறிவுறுத்தினா்.

மேலும், பேருந்து நிறுத்தம் முன் சாலையில் அந்தக் கிராம இளைஞா்கள் அமைத்துக் கொடுத்த 4 இரும்புத் தடுப்புகளையும் வைத்தனா்.

பேருந்து நிறுத்தத்தில் இனிமேல் பேருந்துகளை நிறுத்தவில்லை என்றால், தனியாா் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், அரசுப் பேருந்துகளின் ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் எச்சரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com