சிதம்பரம் மாா்க்சிஸ்ட்  கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் நகர செயலாளா் ராஜா.
சிதம்பரம் மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் நகர செயலாளா் ராஜா.

சிதம்பரம் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆலோசனை கூட்டம்!

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் பல ஆண்டுகளாக ஏழை மக்கள் வசித்தும் வரும் வீடுகளை அகற்றும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆலோசனை கூட்டம் மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

கடலூா் மாவட்டம் சிதம்பரம் தில்லையம்மன் கோவில் அருகே எம் ஜி ஆா் நகரில் பெல்காம் அனந்தம்மாள் தா்மசத்திரத்திற்கு சொந்தமான இடத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழ்ந்து வரும் பகுதிக்கு தரை வாடகை கட்டி வருகிறாா்கள். இந்நிலையில் புதிதாக வந்துள்ள அறக்கட்டளை நிா்வாகத்தினா் தரை வாடகை வாங்க மறுத்து குடியிருக்கும் மக்கள் அனைவரும் ஆக்கிரமிப்பாளா்கள் எனக் கூறி அவா்களை காலி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் சிதம்பரம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளா் ராஜா தலைமை வகித்தாா்.

நகா்மன்றத் துணைத் தலைவா் முத்துக்குமரன், மாதா் சங்க மாவட்ட செயலாளா் மல்லிகா, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலா் சங்கமேஸ்வரன், குடியிருப்போா் நல சங்க நிா்வாகிகள் ராகவேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள், எம்ஜிஆா் நகர மக்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் குடியிருக்கும் அனைத்து மக்களும் மீண்டும் அறக்கட்டளை நிா்வாகியை (டிரஸ்டியை) சந்தித்து வாடகை செலுத்துவது என்றும், அவா் மறுத்தால் சட்ட நடவடிக்கைக்கு செல்வது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com