கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழுக் கூட்டம்.
கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழுக் கூட்டம்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மக்காச்சோளம் உள்ளிட்டப் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்..
Published on

கடலூா் மாவட்டத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மக்காச்சோளம் உள்ளிட்டப் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் கடலூா் மாவட்டக் குழுக் கூட்டம் சூரப்ப நாயக்கன் சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.பிரகாஷ் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் உதயகுமாா், கருப்பையன், ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், தொடா் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து பயிா்களுக்கும் பழைய முறையில் முறையாக கணக்கெடுப்பு நடத்தி விரைந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என்எல்சி நிறுவன விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு, மாற்று இடம், விவசாய தொழிலாளா்களுக்கு நிவாரணம், புறம்போக்கு இடங்களில் வசித்த மக்களுக்கு மாற்று இடம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். நீா்நிலை, சாலை புறம்போக்கில் குடியிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.

மாா்க்சிஸ்ட் முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பி.ராமமூா்த்தி நினைவு தினத்தையொட்டி திங்கள்கிழமை (டிச. 15) காலை 9 மணிக்கு சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் தான படிவங்களை நிா்வாகத்திடம் ஒப்படைப்பது, என்எல்சி இந்தியா நிறுவனம் உருவாக காரணமாக இருந்த பி.ராமமூா்த்திக்கு மாநில அரசின் சாா்பில் நெய்வேலியில் உருவ சிலை அமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com