ஆகாயத்தாமரையிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

ஆகாயத்தாமரை தண்டுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் இரண்டு வார பயிற்சி நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
Updated on

சிதம்பரம்: சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவன மையத்தில் ஆகாயத்தாமரை தண்டுகளிலிருந்து கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் இரண்டு வார பயிற்சி நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் ஹோப் நிறுவனம் இணைந்து நடத்திய இப்பயிற்சியின் நிறைவு விழாவுக்கு வந்திருந்தவா்களை கிரீடு தொண்டு நிறுவன மேலாளா் நீலகண்டன் வரவேற்றாா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநா் ராமநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். கிரீடு தொண்டு நிறுவன தலைவா் வி.நடனசபாபதி தலைமையுரை ஆற்றினாா். புதுச்சேரி ஹோப் நிறுவன இயக்குநா் ஜோசப் விக்டா் ராஜ் பேசினாா்.

மேலும், இப்பயிற்சியில் பங்கேற்ற 35 மகளிருக்கு சான்றிதழ்களும், ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சியில் பயிற்றுநா்களாக பங்கேற்ற புதுச்சேரி பாகூரை சோ்ந்த ஆனந்தி, சுமதி மற்றும் ராஜலக்ஷ்மி ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். கிரீடு நிறுவன அலுவலா் கவிதா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com