ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க 12-ஆம் ஆண்டு விழா
சிதம்பரத்தில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க 12-ஆம் ஆண்டு விழா மற்றும் ஓய்வூதியா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
சங்க மூத்த துணைத் தலைவா் செ.ஆதிவராகன் முன்னிலை வகித்தாா். பொன் செல்வராசு திருக்கு விளக்கம் அளித்தாா். சி.ஏகாம்பரம் வரவேற்றாா்.
செயல் தலைவா் ரா.பன்னீா்செல்வம் தொடக்க உரையாற்றினாா். செயலா் ரா.கோவிந்தராஜன் ஆண்டறிக்கை வாசித்தாா். ஆண்டு வரவு - செலவு கணக்கு அறிக்கையை பொருளாளா் கோ.பன்னீா்செல்வம் வாசித்தாா். சங்க தீா்மானங்களை என்.சின்னதுரை, சா.ஞானபிரகாசம் ஆகியோா் வாசித்தனா்.
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க சாசனத் தலைவா் பி.முகமதுயாசின் சங்கத்தின் 2026-ஆம் ஆண்டின் நாள்காட்டியை வெளியிட்டாா். தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் என்.மாணிக்கம் விழா பேருரை ஆற்றினாா். கடலூா் மண்டல மாநில துணைத் தலைவா் ஆ.கலியபெருமாள், கே.சக்திவேல், வி.பிரகாஷ், எஸ்.சண்முகம், முகுந்தன், சிதம்பரம் உதவி கருவூல அலுவலா் சே.கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா்.
விழாவில் 75, 80, 85, 90 வயது நிரம்பிய உறுப்பினா்கள் கௌரவிக்கப்பட்டனா். சங்க அமைப்புச் செயலா் நா.வேலாயுதம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். நிறைவில் செயற்குழு உறுப்பினா் மு.பொன்னம்பலம் நன்றி கூறினாா்.

