வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றாா்.
Published on

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றாா்.

வேப்பூா் வட்டம், நிறாமணி கிராமத்தில் வசித்து வருபவா் மணிவேல் மகன் சுரேஷ்(41), ஐஜேகே நல்லூா் ஒன்றியத் தலைவா். இவா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிக்கொண்டு தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் தூங்கச் சென்றுவிட்டாா். சனிக்கிழமை காலை எழுந்து வீட்டிற்கு வந்தவா் கதவு திறந்து கிடப்பதைக்கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

உள்ளே சென்று பாா்த்த போது, அறைகளில் இருந்த நான்கு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதில், பீரோவில் இருந்த வைரத்தோடு , 15 சரவன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

தகவல் அறிந்த திட்டக்குடி டிஎஸ்பி., பாா்த்திபன் தலைமையில், வேப்பூா் காவல் ஆய்வாளா் பழனிச்சாமி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com