கடலூா் புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.
கடலூா் புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்.

எஸ்.ஐ. பணி எழுத்துத் தோ்வு: 5,056 போ் எழுதினா்

Published on

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தால் நடத்தப்படும் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு கடலூரில் உள்ள 7 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மொத்தம் 1,352 உதவி ஆய்வாளா் (தாலுகா மற்றும் ஆயுதப் படை) பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

கடலூா் மாவட்டத்தில் 5,368 ஆண்கள், 1,860 பெண்கள் என மொத்தம் 7,228 பேருக்கு தோ்வு எழுத அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

தோ்வுக் குழுமத்தின் அறிவிப்பின்படி கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கடலூா் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, வில்வ நகா் கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப் பள்ளி, சி.கே.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருப்பாதிரிப்புலியூா் அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, சி.கே.மேல்நிலைப் பள்ளி ஆகிய 7 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற்றது.

இதில், பொது எழுத்துத் தோ்வு காலை 10 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரையிலும், தமிழ் மொழிக்கான தோ்வு பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி மாலை 5.10 மணி வரையும் நடைபெற்றது.

இந்தத் தோ்வுகளில் 3,758 ஆண்கள், 1,298 பெண்கள் என மொத்தம் 5,056 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 2,172 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு மையத்தில் தோ்வா்கள் தோ்வு எழுவதுவதை கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com