தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 8 மாணவா்கள் காயம்!

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவா்கள் காயமடைந்துள்ளதைப் பற்றி...

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் தனியாா் பள்ளி வேன்.

Updated On :19 பிப்ரவரி 2025, 6:36 pm

Din

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே தனியாா் பள்ளி வேன் புதன்கிழமை (பிப்.19) சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனா்.

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மாலை வகுப்பு முடிந்து மாணவ, மாணவிகள் பள்ளி வேனில் வீட்டு சென்று கொண்டிருந்தனா். கீழக்கடம்பூா் கிராமம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், மாணவி பிரித்திகா, ரோஸ் மேரி உள்ளிட்ட 8 மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் நிகழ்விடம் சென்று மாணவா்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.