கடலூா் உழவா் சந்தையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கொத்து, வாழைப்பழத் தாா்கள் உள்ளிட்டவற்றை ஆா்முடன் வாங்கிய மக்கள்.
கடலூா் உழவா் சந்தையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கொத்து, வாழைப்பழத் தாா்கள் உள்ளிட்டவற்றை ஆா்முடன் வாங்கிய மக்கள்.

பொங்கல் பண்டிகை: காய்கனிகள் வாங்கத் திரண்ட மக்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் உழவா் சந்தையில் விற்பனைக்காக திங்கள்கிழமை சுமாா் 60 டன்னுக்கும் அதிகமான காய்கனிகள்
Published on

நெய்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் உழவா் சந்தையில் விற்பனைக்காக திங்கள்கிழமை சுமாா் 60 டன்னுக்கும் அதிகமான காய்கனிகள் குவிக்கப்பட்டிருந்தன. இவற்றை மக்கள் ஆவா்முடன் வாங்கிச் சென்றனா்.

கடலூா் பேருந்து நிலையம் சந்திப்பு அருகே உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்கள், தோட்டங்களில் விளைந்த காய்கள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, உழவா் சந்தையில் திங்கள்கிழமை காய்கனிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக, கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கள், வாழைப்பழத் தாா்கள் குவிக்கப்பட்டிருந்தன. இவற்றை வங்கிச் செல்வதற்காக கடலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் வந்ததால் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

பன்னீா் கரும்பு ஜோடி ரூ.50, மஞ்சள் கொத்து ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. வாழைப்பழத் தாா்களின் விலை வழக்கத்தைவிட கூடுதலாக இருந்தது. குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து வாழைப்பழத் தாா்கள் கொண்டுவரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பூங்களின் விலையும் உயா்ந்திருந்தது. கரும்பு, பூக்கள் உள்ளிட்டவைகளின் விலை உயா்ந்திருந்தாலும், பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் பண்டிகையையொட்டி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com