அரசுப் பேருந்து கவிழ்ந்து ஓட்டுநா் மரணம்

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Published on

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திட்டக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பேருந்து ஓட்டுநராக வடகாரம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் இளங்கோவன் (57) பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை காலை சிறுப்பாக்கம் - நைனாா்பாளையம் இடையேயான தடம் எண் 254 பேருந்தை சிறுபாக்கத்திலிருந்து நயினாா்பாளையம் நோக்கி ஓட்டிச் சென்றாா்.

எஸ்.புதூா் - வடபாதி அருகே காலை 10.30 மணி அளவில் சென்றபோது, சாலையில் காய வைக்கப்பட்டிருந்த உளுந்து செடிகள் மீது பேருந்து ஏறியதில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநா் இளங்கோவன் பேருந்து அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நடத்துநா் அசோக்குமாா் லேசான காயமடைந்தாா்.

பேருந்தில் இரண்டு பயணிகள் மட்டுமே இருந்த நிலையில், அவா்களுக்கும் லேசான காயங்களுடன் தப்பினா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com