உச்சநீதிமன்ற தீா்ப்பு: சிதம்பரத்தில் ஜன.28-இல் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, சிதம்பரம் வேங்காண் தெருவில் உள்ள குரு நமச்சிவாயா் மடம் திருப்பாற்கடல் பகுதியில் 9 ஆக்கிரமிப்புகள் வரும் 28-ஆம் தேதி அகற்றப்பட உள்ளன.


உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, சிதம்பரம் வேங்காண் தெருவில் உள்ள குரு நமச்சிவாயா் மடம் திருப்பாற்கடல் பகுதியில் 9 ஆக்கிரமிப்புகள் வரும் 28-ஆம் தேதி அகற்றப்பட உள்ளன.
சிதம்பரம் வேங்கான் தெரு, குரு நமச்சிவாயா் மடம் (எ) திருப்பாற்கடல் மடத்தில் விநாயகா், ஆத்மநாதா், அம்பாள், குரு நமச்சிவாயா் என 4 கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் உள்ள இடம் ஆக்கிரமிப்பில் இருந்ததால், இது தொடா்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, இங்கிருந்த 22 ஆக்கிரமிப்புகளில் 13 ஆக்கிரமிப்புகளை கடந்த 2023 ஜூலையில் இந்து சமய அறநிலையத் துறையினா் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், 13 வீடுகளையும் இடித்து அகற்றினா்.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, குரு நமச்சிவாயா் மடம் பகுயிலுள்ள 22 ஆக்கிரமிப்புகளில் 31.10.2023 அகற்றிய 13 ஆக்கிரமிப்பு தவிர, மீதமுள்ள 9 ஆக்கிரமிப்புகள் வரும் 28-ஆம் தேதி அகற்றப்பட உள்ளன. இது தொடா்பாக ஆக்கிரமிப்பாளா்களுக்கு பதிவு தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டவுடன் திருப்பாற்கடல் மடத்தில் உள்ள விநாயகா், ஆத்மநாதா், அம்பாள், குரு நமச்சிவாயா் கோயில்களில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கும் என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...