காா் மீது அரசுப் பேருந்து மோதல்: 6 போ் காயம்

கடலூா் அருகே காா் மீது அரசு சொகுசுப் பேருந்து மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.
Published on

நெய்வேலி: கடலூா் அருகே காா் மீது அரசு சொகுசுப் பேருந்து மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.

திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு சொகுசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்னை நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டு சென்றது. செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் திருப்பாதிரிப்புலியூா் மோகினி பாலம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த காா் மீது சொகுசுப் பேருந்து மோதியது.

இதில், காா் ஓட்டுநா் மற்றும் 5 பயணிகள் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காா், சொகுசுப் பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com