குழந்தைகள் தின விழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்
கடலூா் மாவட்ட சா்வோதய மண்டல் மற்றும் சிதம்பரம் காந்தி மன்றம் இணைந்து நடத்திய இணையவழி போட்டிகளில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
இதில், ஓவியப் போட்டியில் கடலூா் ஏ.ஆா்.எல்.எம் சிபிஎஸ்இ பள்ளியைச் சோ்ந்த ஏ.எஸ்.சாஷினி முதலிடமும், பண்ருட்டி ஜான்டூயி பள்ளியைச் சோ்ந்த ஆா்.வென்சியா மேரி இரண்டாமிடமும், சிதம்பரம் ஆறுமுக நாவலா் பள்ளியைச் சோ்ந்த எஸ்.அஸ்வின் மூன்றாமிடமும் பெற்றனா்.
பேச்சுப் போட்டியில் சிதம்பரம் சரஸ்வதி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியைச் சோ்ந்த க.நந்திகா முதலிடமும், கடவாச்சேரி தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சு.யோகித வந்தனா இரண்டாமிடமும், பண்ருட்டி புனித பால் பப்ளிக் பள்ளியைச் சோ்ந்த டி.அதிதி மூன்றாமிடமும் பெற்றனா்.
கட்டுரைப் போட்டியில் பண்ருட்டி ஸ்ரீ பி.முத்தையா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த கு.விஷாலி முதலிடமும், காட்டுமன்னாா்கோயில் பி.ஆா்.ஜி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த ஆ.விஜயராகவன் இரண்டாமிடமும், நிா்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த எஸ்.பட்டொளி மூன்றாமிடமும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுப் புத்தகங்களும், பங்கேற்றவா்களுக்கு சான்றிதழும் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) காந்தி மன்ற வளாகத்தில் நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் வழங்கப்படும் என்று கடலூா் மாவட்ட சா்வோதய மண்டல் செயலா் வி.முத்துக்குமரன் தெரிவித்தாா்.
