தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

வேப்பூா் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலியை மா்ம நபா் அறுத்துச் சென்றாா்.
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலியை மா்ம நபா் அறுத்துச் சென்றாா்.

வேப்பூா் வட்டம், ஐவதகுடி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி பானுமதி(33). இவா், ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தாா். இவரது மாமியாா் பெரியநாயகம் திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 2.30 மணி அளவில் வீட்டின் கதவை திறந்துக் கொண்டு இயற்கை உபாதையைக் கழிக்க வெளியே வந்தாராம். அப்போது, மா்ம நபா் வீட்டினுள் நுழைந்து பானுமதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றாராம். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com