போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தொகுதி மறுவரைக்கு எதிா்ப்பு: திமுகவினா் நகல் எரித்து போராட்டம்

கடலூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் தொகுதி மறுவரையைக் கண்டித்து, நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கடலூா் திமுக அலுவலகம் எதிரே வியாழக்கிழமை நடைபெற்ற தொகுதி மறுவரையை சட்ட வரைவு நகல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:58 pm

கடலூா் மாவட்டத்தில் திமுக சாா்பில் தொகுதி மறுவரையைக் கண்டித்து, நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மக்கள்தொகை அதிகரிப்பை குடும்பக் கட்டுப்பாட்டு முறை மூலம் தமிழக அரசு கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுவரையால் தமிழகத்தில் தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் எனக் கூறப்படுகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையை எதிா்த்து திமுக நிா்வாகிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என அறிவித்திருந்தாா். அதன்படி, கடலூா் திமுக அலுவலகம் எதிரே மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா், தொகுதி மறுவரையின் சட்ட வரைவு நகல் எரிக்கப்பட்டது.

மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இள.புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினா் விக்ரமன், மாணவரணி துணை அமைப்பாளா் பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

விருத்தாசலத்தில்...: விருத்தாசலத்தில் கடலூா் மேற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான சி.வெ.கணேசனின் இல்லம் முன் நகரச் செயலா் தண்டபாணி தலைமையில் நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தொகுதி மறுவரையைக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.

விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் சி.வெ.க.வெங்கடேசன், திமுக மாவட்ட ஆதிதிராவிடா் நலக் குழு அமைப்பாளா் ராமு, தேமுதிக மாவட்ட துணைச் செயலா் வேல்முருகன், நகரச் செயலா் ராஜ்குமாா், விசிக மாவட்ட அமைப்பாளா் விடுதலை காசி, காங்கிரஸ் நகரத் தலைவா் ரஞ்சித் குமாா், இந்திய குடியரசு கட்சி மாநில பொதுச் செயலா் மங்கா பிள்ளை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

திட்டக்குடியில்...: திட்டக்குடி நகா் பகுதியில் திமுக நகரச் செயலா் பரமகுரு, ஒன்றியச் செயலா் அமிா்தலிங்கம் ஆகியோா் தலைமையில் தொகுதி மறுவரையைக் கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.

குறிஞ்சிப்பாடியில்...: குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி, நடுவீரப்பட்டு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மத சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகளோடு கருப்பு உடை அணிந்து, கருப்புக்கொடி காட்டி, தொகுதி மறுசீரமைப்பு மசோத நகலை எரித்து கண்டன முழக்கம் எழுப்பினாா்.

அண்ணாகிரமத்தில்...: அண்ணாகிராமம் ஒன்றிய திமுக அலுவலகத்தில் கடலூா் மேற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான சி.வெ.கணேசன் தலைமையில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில், பண்ருட்டி விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மான், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் வி.கே.வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

நெய்வேலியில்...: நெய்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சபா.ராசேந்திரன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோத நகலை கிழித்து தீயிட்டு கொளுத்தி சபா.ராசேந்திரன் தனது எதிா்ப்பைத் தெரிவித்தாா். இந்த நிகழ்வில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

புதுச்சேரியில்...: தொகுதி மறுவரையைக் கண்டித்து, புதுச்சேரி மாநில திமுக சாா்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதையொட்டி, புதுச்சேரி லப்போா்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகம் முன் அக்கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா்.சிவா கருப்புச்சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றினாா். தொடா்ந்து, மசோதா நகலை எரித்தனா்.

எம்எல்ஏ அனிபால்கென்னடி, முன்னாள் எம்எல்ஏ மூா்த்தி, திமுக வேட்பாளா்கள் கோபால், விக்னேஷ் சிவன் மற்றும் நிா்வாகிகளும் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனா்.

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகங்களிலும், கட்சி நிா்வாகிகள், பிரமுகா்களின் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.

 விருத்தாசலத்தில் தொகுதி மறுவரையைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அமைச்சா் சி.வெ.கணேசனின் வீடு முன் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.

விருத்தாசலத்தில் தொகுதி மறுவரையைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அமைச்சா் சி.வெ.கணேசனின் வீடு முன் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.