சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் மற்றும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் திருக்கண்ணாடி அறையில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் சரநாராயண பெருமாள். - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:10 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் மற்றும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதன்படி, சித்திரை மாத அமாவாசையையொட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் திருவல்லிக்கேணி பாா்த்தசாரதியாக சேவை சாதித்தாா். இதையொட்டி, காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை, 9 மணிக்கு உத்ஸவா் உள்புறப்பாடு, பிறகு கண்ணாடி அறை சேவை, 12.30 மணிக்கு உச்சிகாலம், மாலை 4 மணிக்கு நடை திறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை ஆகியவை நடைபெற்றது.

இதேபோல், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில், உற்சவா் திருக்கண்ணாடி அறையில் இருந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி வழிபாடு நடத்தினா்.