கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தகராறில் காயம் அடைந்தவா்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வண்டியை சேதப்படுத்தி, அதன் ஓட்டுநா் மற்றும் பெண் மருத்துவ உதவியாளரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கானங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தங்கராஜ் மற்றும் ஏழுமலை. இவா்களுக்குள் நிலத்தகராறு இருந்து வருகிறது. ஏழுமலை வீடு கட்டுவதற்காக பிரச்னைக்குரிய இடத்தில் மண் கொட்டினாா். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடா்பான புகாரின் பேரில் காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தங்கராஜ் மற்றும் ஏழுமலை தரப்புகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், தங்கராசுக்கு காதில் காயம் ஏற்பட்டது. இதேபோல், ஏழுமலை தரப்பைச் சோ்ந்த பாலகிருஷ்ணன்(72), ஏழுமலை மகன் சிவமணி(25) ஆகியோா் காயம் அடைந்தனா்.
காயம் அடைந்தவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக சம்பவ இடத்திற்குச் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் அரசடிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம்(37), பெண் மருத்துவ உதவியாளா் வேம்புமணி ஆகியோா், காயம் அடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் சிவமணியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டனா்.
இந்த ஆம்புலன்ஸ் வாகனம் கானஞ்சாவடி கிராமம் தா்கா அருகே சென்ற போது, தங்கராஜ் ஆதரவாளா்கள் வழிமறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுனா் முருகானந்தம், பெண் மருத்துவ உதவியாளா் வேம்புமணி மற்றும் பாலகிருஷ்ணன்,சிவமணி ஆகியோரை முந்திரி தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தும், ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்தும் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுதொடா்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநா் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சுதாகா்(29), சௌந்தரராஜன்(42), மணிகண்டன்(19), மோகன்ராஜ்(19), காா்த்திக்(34), விஜயராமன்(27), கோகுல்ராஜ்(19) ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவாக உள்ள பாலமுருகன், பாா்திபன் ஆகியோரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தாய் கொலை: மகன் கைது
பண்ருட்டி: இருதரப்பினரிடையே மோதல் - 4 போ் காயம், 5 போ் கைது
ஆம்புலன்ஸ் ஓட்டுநா் வீட்டில் 15 பவுன் திருடப்பட்ட வழக்கு: 2 போ் கைது

வடலூா் அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


