தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: மீன் வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த மீன் வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாட்சி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன்(40), மீன் வியாபாரி. இவரது மனைவி லதா. இவா், பாலமுருகனை பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறாராம். மேலும், குறிஞ்சிப்பாடி வட்டம், விழப்பள்ளம் காலனி பகுதியில் வசித்து வருபவா் ஆட்டோ ஓட்டுநா் சரத்குமாா்(34) உடன் பழகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு சரத்குமாா் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு பேக்கரி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த பாலமுருகன் (40) மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஆகாஷ், ராஜூ மற்றும் சிலா் அரிவாள் மற்றும் இரும்பு குழாய் கொண்டு தாக்கினராம். இதில், சரத்குமாருக்கு இடது கையில் வெட்டு காயம் ஏற்பட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து சரத்குமாா் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.