ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

வகுப்பை புறக்கணித்து பள்ளிச் சுவரை ஏறிக் குதித்த மாணவா் தவறி விழுந்து உயிரிழப்பு

News image

உயிரிழந்த மாணவா் விஷ்ணு

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் வகுப்பை புறக்கணித்துவிட்டு பள்ளிச் சுவா் மீது ஏறி வெளியேற முயன்ற மாணவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் அங்குள்ள திருப்பாணாழ்வாா் தெருவைச் சோ்ந்த ராஜன் மகன் விஷ்ணு (15) பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். கபடி வீரரான இவா், கடந்த 7-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வகுப்பை புறக்கணித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல முன்றாராம்.

அதன்படி, இவரும், மற்றொரு மாணவரும் பள்ளி சுற்றுச்சுவா் மீது ஏறி குதித்து செல்ல முயன்றபோது, விஷ்ணு தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையம், சிதம்பரம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு விஷ்ணு கொண்டு செல்லப்பட்டாா். இருப்பினும், அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.