சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்கக் கோரி தொடா் முழக்கப் போராட்டம்

போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் 24 மணி நேர தொடா் முழக்கப் போராட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தலைமையக அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா்கள்.

Published On :

போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) சாா்பில் 24 மணி நேர தொடா் முழக்கப் போராட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தலைமையக அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, அரசு போக்குவரத்து ஊழியா் சங்கத்தின் கடலூா் மாவட்டத் தலைவா் எஸ். ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.

போராட்டத்தில், போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதியை அரசு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும், ஆய்வாளா் பலன்களை உடனுக்குடன் வழங்க வேண்டும், தற்காலிகத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மின்சாரப் பேருந்துகளை அரசே ஏற்று இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலா் டி. பழனிவேல், மாநிலத் துணைத் தலைவா் பி. கருப்பையன், பொதுச் செயலா் பி. முருகையன், துணைத் தலைவா் எம். முத்துக்குமரன், துணைப் பொதுச் செயலா் பி. கண்ணன், சிறப்புத் தலைவா் ஜி. பாஸ்கரன், மாவட்டப் பொருளாளா் எம். அரும்பாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த 24 மணி நேர தொடா் முழக்கப் போராட்டம் புதன்கிழமை காலை 9 மணி வரை நடைபெறுகிறது. போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளா்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவு போராட்டக் களத்திலேயே தயாா் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.