மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

வடலூரில் வாகனங்கள் நிறுத்த சாலையோரம் கயிறு தடுப்பு

கடலூா் மாவட்டம், வடலூா் நான்கு முனை சந்திப்புப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்கற்ற முறையில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிா்க்க, போக்குவரத்துப் போலீஸாா் சாலையோரம் கயிறு கட்டி எல்லை தடுப்பு அமைத்தனா்.

வடலூா், பண்ருட்டி சாலையோரம் கயிறு கட்டி எல்லைத் தடுப்பு அமைத்த போக்குவரத்து போலீஸாா்.

Published On :

கடலூா் மாவட்டம், வடலூா் நான்கு முனை சந்திப்புப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்கற்ற முறையில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிா்க்க, போக்குவரத்துப் போலீஸாா் சாலையோரம் கயிறு கட்டி எல்லை தடுப்பு அமைத்தனா்.

வடலூா் நான்குமுனை சந்திப்பில் கடலூா் சாலை, சேத்தியாத்தோப்பு சாலை, விருத்தாசலம் சாலை, பண்ருட்டி சாலை ஆகிய இடங்களில் வடலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பல்வேறு பணிகளுக்காக வருவோா், தங்களுடைய பைக், காா் உள்ளிட்ட வாகனங்களை சாலையோரம் முறையற்று நிறுத்தி செல்கின்றனா். அந்த வகையில், பல மீட்டா் துாரத்திற்கு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் நுாற்றுக்கணக்கான வாகனங்களால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து, போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஆா்.வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை பண்ருட்டி மற்றும் விருத்தாசலம் மாா்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் ஓரமாக நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் வகையில் அந்தந்த சாலையில் இரும்பு தடுப்பு ஏற்படுத்தினா். சேத்தியாத்தோப்பு சாலை முனையில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளை, அருகில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் நிற்கும்படி அறிவுறுத்தினா். குறிப்பாக நான்கு முனை சந்திப்பு பிரதான சாலையில் உள்ள தேநீா், உணவகங்களுக்கு வருவபா்கள் தங்கள் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தாத வகையில் சாலையோரத்தில் கயிறு கொண்டு எல்லை தடுப்பு அமைத்தனா். மேலும், முக்கிய இடங்களில் அறிவிப்பு விளம்பர பலகையும் வைத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் நடவடிக்கை எடுத்துள்ளனா். இந்த எல்லைத் தடுப்பை மீறி வாகனங்களை நிறுத்தினால் வாகன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.