ஆட்டோ மோதி தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 3:46 am IST

கடலூா் வெள்ளக்கரை சாலையில் அடையாளம் தெரியாத ஆட்டோ மோதியதில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரெகல்சிங் (48), கடலூரில் தங்கி கூலித் தொழில் செய்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளக்கரை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத ஆட்டோ ஒன்று அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த ரெகல்சிங்கை அப்பகுதியினா் மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ரெகல்சிங் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற ஆட்டோ மற்றும் அதன் ஓட்டுநா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.