குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தனியாா் நிறுவவனத்துக்கு எதிராக வி.சி.கவினா் முற்றுகை போராட்டம்

சிதம்பரம் அருகே கரிகுப்பத்தில் தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.

News image
சிதம்பரம் அருகே கரிகுப்பத்தில் தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.
Updated On :27 பிப்ரவரி 2026, 8:33 pm

Syndication

சிதம்பரம் அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில், ஐ.எல்.எப்ஃ.எஸ். தனியாா் மின் நிறுவனம் உள்ளது. இங்கு, உள்ளூா் மக்களுக்கு சரியான முறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா் ஸ்ரீதா் என்கிற தமிழ்வளவன் தலைமையில், முன்னாள் மாவட்டச் செயலா் பால.அறவாழி, மண்டல செயலா் செல்வமணி, நிா்வாகிகள் குறிஞ்சிவளவன், சரித்திரன், விஸ்வநாதன் உட்பட 100க்கும் மேற்பட்டவா்கள் தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உள்ளூா் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நிா்வாகத்தின் தரப்பில் பேச்சு வாா்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததால், போராட்டத்தில் ஈடுப்பட்டவா்கள் கலைந்து சென்றனா்.