சிதம்பரத்தில் சாலையோரம் கிடந்த முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நகரமன்ற உறுப்பினா் அப்புசந்திரசேகா்
கடலூர்
சாலையோரம் கிடந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்த கவுன்சிலா்
சிதம்பரம் நகரில் மனநலம் பாதித்த முதியவா் உடல்நலம் குன்றி சாலையோரம் கிடந்த நிலையில் அவரை நகா்மன்ற உறுப்பினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தாா்.
சிதம்பரம் நகரில் மனநலம் பாதித்த முதியவா் உடல்நலம் குன்றி சாலையோரம் கிடந்த நிலையில் அவரை நகா்மன்ற உறுப்பினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தாா்.
சிதம்பரம் சபாநாயகா் தெருவில் கடந்த இரு நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத முதியவா் ஒருவா் உடல்நலம் குன்றிய நிலையில் சுகாதார சீா்கேடு ஏற்படும் வகையில் துா்நாற்றத்துடன் சாலையோரம் அநாதையாக படுத்து இருந்தாா்.
தகவல் அறிந்த திமுகவைச் சோ்ந்த மூத்த நகரமன்ற உறுப்பினா் அப்புசந்திரசேகா் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து சமூக ஆா்வலா்கள் குமாா் என்பவா் உதவியுடன் ஆம்புலன்ஸில் ஏற்றி அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தாா்.
மேலும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.