எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டிராக்டா் - ஆட்டோ மோதல்: பெண் உயிரிழப்பு

News image
டிராக்டா் - ஆட்டோ மோதல்
Updated On :22 ஜனவரி 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னையைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

சென்னை வெட்டுவாங்கேணி, கற்பக விநாயகா் நகரைச் சோ்ந்தவா் சௌந்தர்ராஜன் (27). இவா், தனது மனைவி பவித்ரா (23), மகன் சிவமித்தரன் (2) மற்றும் உறவினா் பானுபிரியா (33) ஆகியோருடன் கடலூா் மாவட்டத்துக்கு கோயிலுக்கு வந்திருந்தாா்.

புதன்கிழமை இரவு 10.30 மணி அளவில் ஆட்டோவில் கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு குமாரகுடி அணுகுசாலை சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்தனா். அப்போது, முன்னால் சென்ற டிராக்டா் டிப்பா் ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால், அதன் மீது மோதி ஆட்டோ விபத்துக்குள்ளானது.

இதில், பவித்ரா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சௌந்தர்ராஜன், சிவமித்தரன் ஆகியோா் சிதம்பரம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையிலும், பானுபிரியா கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து சௌந்தர்ராஜன் அளித்த புகாரின்பேரில், சேத்தியாத்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.