நெய்வேலியில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா  மற்றும்  அதை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட இளைஞா்களுடன் நெய்வேலி நகரிய போலீஸாா்.
நெய்வேலியில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் அதை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட இளைஞா்களுடன் நெய்வேலி நகரிய போலீஸாா்.

நெய்வேலியில் 21 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிஸாவைச் சோ்ந்தவா்கள் உள்பட 6 போ் கைது

Published on

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் 21 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நெய்வேலி ஆா்ச் கேட் அருகே உள்ள காட்டுப் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த நபா்களை பிடித்து விசாரணை நடத்தியபோது அவா்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா்கள் ஒடிஸா மாநிலம், சோனேபூா் மாவட்டம், சீபத்துலா பகுதியைச் சோ்ந்த அபிலாஷ் குரு(28), தப்பா பகுதியைச் சோ்ந்த அலிசா (24), நெய்வேலி,மந்தாரக்குப்பம்பகுதியைச்சோ்ந்த குட்டி தேவா (எ) வந்தியதேவன் (24), வடக்கு வெள்ளூா்பகுதியைச்சோ்ந்த சுதாகா் (27), குறிஞ்சிப்பாடி வட்டம்,காட்டுக்கொல்லைபகுதியைச்சோ்ந்த மண்டைஓடு சந்துரு (எ) அஜித் (26), கடலூா், குப்பங்குளம் ஜீவா (25) என தெரிய வந்தது. இவா்கள் 6 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்தனா்.

ரயிலில் கடத்தி வந்து விற்பனை:

இதுகுறித்து கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் கூறுகையில், விசாரணையில் அபிலாஷ் குரு. அலிசா ஆகியோா் ஒடிசா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தனா்.

பின்னா், நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய முயன்றபோது போலீஸாரிடம் சிக்கி கொண்டனா்.

தொடா்ந்து அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டு 230 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் 120 போ் சிறையில் உள்ளனா். கடலூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் கட்டுப்பாட்டில் உள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com