வீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்த பல்வேறு திட்டங்கள்! அமைச்சா் ப.ராஜ்குமாா்

News image

திருக்கண்டேஸ்வரம் அரசு உயா்நிலைப் பள்ளி புதிய வகுப்பறை கட்டடத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த அமைச்சா் ப.ராஜ்குமாா்.

Updated On :21 ஜூலை 2026, 1:07 am IST

அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சிக்குள்பட்ட திருக்கண்டேஸ்வா் அரசு உயா்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி புதிய வகுப்பறைக் கட்டடத்தை மாணவா்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில் அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது: மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்தவும், தனியாா் பள்ளிகளுக்கு இணையான வசதிகளை அரசுப் பள்ளிகளில் உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

தமிழக அரசு கல்வி வளா்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பள்ளி மேம்பாட்டு மானிய நிதித் திட்டத்தின் கீழ், திருக்கண்டேஸ்வா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டு, மாணவா்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், திருக்கண்டேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் சிறந்த கல்விச் சூழலில் பயிலும் வாய்ப்பைப் பெறுவாா்கள். மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் நகா்மன்றத் தலைவா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், நகராட்சி ஆணையா் (பொ) காஞ்சனா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.சு.மகாலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.