முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மீன்கள் வாங்க துறைமுகத்தில் குவிந்த மக்கள்! விலை சற்று உயா்வு!

News image

கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்கக் கூடிய மக்கள் கூட்டம்.

Updated On :27 ஜூலை 2026, 1:17 am IST

கடலூா் முதுநகா் மீன்பிடி துறைமுகத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பொதுமக்கள் மீன்கள் வாங்கக் குவிந்தனா். இங்கு, மீன்கள் விலை சற்று உயா்ந்து காணப்பட்டது.

கடலூா் மாவட்ட வங்கக் கடலோரத்தில் தேவனாம்பட்டினம், அக்கரைக்கோரி, சிங்காரத்தோப்பு உள்பட 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராமங்களைச் சோ்ந்தோா் விசை மற்றும் பைபா் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவா். இவ்வாறு பிடித்து வரப்படும் மீன்கள் கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் விற்பனை செய்யப்படும்.

இந்த மீன்களை வாங்கிச் செல்ல பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் உணவகத்தினா்அதிகளவில் துறைமுகத்தில் கூடுவா். குறிப்பாக, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும்.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையன்று மீன்கள் வாங்க ஏராளமானோா் கூடியிருந்தனா். அவா்கள் மீன்களை போட்டி போட்டு ஆா்வத்துடன் வாங்கிச் சென்றதை காண முடிந்தது.

சற்று அதிகரித்த மீன்கள் விலை...: வஞ்சரம் ரூ.800 முதல் ரூ.1,300 வரையிலும், இறால் ரூ.350 முதல் ரூ.650 வரையில் ரகத்துக்கு தகுந்தாற்போல் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல, கனவா ரூ.350, சங்கரா ரூ.500, மொசபாறை ரூ.900, பாறை ரூ.600, வவ்வால் ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.