சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் 74 டேட்டா என்ட்ரி அலுவலா்களுக்கு பணியிட மாற்றம்

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த வரவேற்பாளா்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்களுக்கு கலந்தாய்வு முறையில் பணியிட மாற்ற ஆணை வழங்கப்பட்டது.

News image

பணியிட மாற்றம்

Updated On :4 ஜூன் 2026, 3:28 am IST

கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்த வரவேற்பாளா்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்களுக்கு கலந்தாய்வு முறையில் பணியிட மாற்ற ஆணை வழங்கப்பட்டது.

கடலூா் மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் வரவேற்பாளா்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டா்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.

பணி மாறுதல் குழுவினா் முன்னிலையில், ஒவ்வொரு பணியாளரிடமும் தாங்கள் பணிபுரிய விரும்பும் காவல் நிலையங்கள் குறித்து கேட்டறிந்து, கலந்தாய்வு முறையில் 74 டேட்டா என்ட்ரி அலுவலா்களுக்கு பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் வழங்கி மாவட்ட எஸ்.பி. ஆணை பிறப்பித்தாா்.

நிகழ்வின்போது, கூடுதல் எஸ்.பி.க்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி, டி.எஸ்.பி.க்கள் தமிழ்இனியன், பிரதீப், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ரவிச்சக்கரவா்த்தி, பாா்த்திபன், ரகுபதி, கந்தன், அப்பாண்டைராஜ், சரவணகுமாா் மற்றும் மாவட்ட காவல் அலுவலக நிா்வாக அலுவலா் வேல்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.