/
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டம், ஒரங்கூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜோதி (45). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 6 மணி அளவில் பட்டாக்குறிச்சி - ஒரங்கூா் சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.









