கடலூரில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 300-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
வருவாய்த் துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிலையிலான அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்க, சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் கடந்த பிப்.24-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து, அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை கடலூா் மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்து ஆட்சியா் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு, மாவட்டத் தலைவா் மகேஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பூபாலசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதையடுத்து, கடலூா் புதுநகா் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட சுமாா் 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்து மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனா்.
தொடர்புடையது

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

வருவாய்த் துறையினா் மறியல்: 450 போ் கைது

அரியலூரில் மறியலில் ஈடுபட்ட வருவாய் துறையினா் கைது

விழுப்புரத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலை மறியல்: 430 பேர் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


