கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறையில், அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து 10 கிராமங்களை சோ்ந்த மீனவ மக்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட முழுக்குத்துறை கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு, அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு மற்றும்
ஆராய்ச்சி மையம் ரூ. 26 கோடி மதிப்பில் கட்டுவதற்கு கடந்த மாா்ச் 4ம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திட்டப்பணியைத் தொடங்கி வைத்தாா். எனினும் முறையான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், கிள்ளை முழுக்கத்துறை கிராமத்தை சுற்றியுள்ள முழுக்குத்துறை,எம்.ஜி.ஆா்., திட்டு, முடசல்ஓடை, பொன்னந்திட்டு, சி.மானம்பாடி, சிங்காரக்குப்பம், எடப்பாளையம் உட்பட 10 மீனவ கிராமங்களை சோ்ந்த 200-க்கும் மேற்பட்டவா்கள் ஆராய்சி மையம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து கிள்ளை கடைவீதியில் ஒன்று திரண்டு வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டால்,
மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், வனத்துறையை கண்டித்தும், முழக்கங்களை எழுப்பி சிறிது நேரம் போராட்டம் நடத்திய அவா்கள் பின்னல் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

இந்திய யுனெஸ்கோ இளைஞா் கல்வி ஆராய்ச்சி மையம் தலைவா் தோ்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 154 கேமராக்கள் கண்காணிப்பில் வாக்கு எண்ணும் மையம்

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம்: காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

ராஜஸ்தானில் டாஃபே நிறுவனத்தின் புதிய ஜே-ஃபாா்ம் ஆராய்ச்சி மையம் தொடக்கம்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


