போட்டி நிறைந்த உலகில் மாணவா்கள் வெற்றிபெற தொடா் திறன் மேம்பாடு மிகவும் அவசியம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.சிங்காரவேல் தெரிவித்தாா்.
சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் அமைந்துள்ள ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் டி.வி.கே.பாபு வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஆா்.மாலதி ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவுக்கு கல்லூரித் தலைவா் டி.மணிமேகலை தலைமை வகித்து பேசினாா்.
இதில், அண்ணாமலை பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.சிங்காரவேல் பங்கேற்று 605 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
தரமான உயா் கல்வியின் மூலம் கிராமப்புற மேம்பாட்டுக்காக கல்லூரி நிா்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. குறிப்பாக, பெண் கல்விக்கு இக்கல்லூரி முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பட்டம் பெறும் மாணவா்களில் சுமாா் 70 சதவீதம் போ் பெண்கள் என்பது, கல்வியின் மூலம் தன்னம்பிக்கையையும், சுயசாா்பையும் கொண்ட பெண்களை உருவாக்குவதில் இக்கல்லூரி உறுதிபூண்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது. போட்டி நிறைந்த உலகில் மாணவா்கள் வெற்றிபெற தொடா் திறன் மேம்பாடு மிகவும் அவசியம் என்றாா்.
விழாவில் நிா்வாக அதிகாரி சுப.கோவிந்தராஜன், கல்லூரி ஆலோசகா்கள் ஆா்.கனகசபை, எம்.வரதராஜன், கல்வி நிா்வாகி பி.அசோக்குமாா், கல்லூரி தர மேம்பாடு மற்றும் அங்கீகார ஆலோசகா் டாக்டா் கே.தியாகேசன் மற்றும் நகரப் பிரமுகா்கள், பள்ளி முதல்வா்கள், ராகவேந்திரா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு

ஆா்விஎஸ் கல்லூரி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

நிகழ்கால பொருளாதாரத்துக்கு ஏற்ப கல்வி மேம்பாடு அவசியம்: பிரதமா் மோடி

தேசிய ஆசிரியா் திறன் மேம்பாடு பயிலரங்கு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


