மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

வாகனங்களை வாடகைக்கு எடுத்து மோசடி; ஒருவா் கைது: 6 வாகனங்கள் மீட்பு!

கடலூா் மாவட்டம் மந்தாரக்குப்பம் பகுதியில் வாகனங்களை மாத வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்து, 6 வாகனங்களை மீட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 1:23 am IST

கடலூா் மாவட்டம் மந்தாரக்குப்பம் பகுதியில் வாகனங்களை மாத வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்து, 6 வாகனங்களை மீட்டனா்.

கடலூா் மாவட்டம் மந்தாரக்குப்பம் அருகே ஏ. குறவன்குப்பத்தில் கே.கே.பி. டிராவல்ஸ் நடத்தி வருபவா் குமரகுரு (41). இவரை, மந்தாரக்குப்பம் காமராஜ் நகரைச் சோ்ந்த விஜயசுந்தா் (37) அணுகி, தான் மயிலாடுதுறையில் உள்ள சோலாா் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அந்த நிறுவனத்திற்கு மாத வாடகைக்கு வாகனங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய குமரகுரு, தன்னிடம் இருந்த காா் மற்றும் சிறிய சரக்கு வாகனம் (டாடா ஏஸ்) ஆகியவற்றை மாத வாடகை ரூ.37 ஆயிரத்திற்கு, வேப்பங்குறிச்சியைச் சோ்ந்த விஜய் (42) என்பவா் மூலம் கடந்த 2025 டிசம்பா் 20 ஆம் தேதி கொடுத்துள்ளாா்.

வாகனங்களை எடுத்துச் சென்ற முதல் இரண்டு மாதங்கள் மட்டும் வாடகைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பின்னா், வாடகைத் தொகையும் வழங்காமலும், வாகனங்களையும் திருப்பிக் கொடுக்காமலும் விஜய் உள்ளிட்டோா் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக குமரகுரு அளித்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்தனா்.

மோசடி செய்தவா் கைது: இதுகுறித்து மந்தாரக்குப்பம் காவல் ஆய்வாளா் இளவழகி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தியதில் மோசடி நடந்தது தெரியவந்தது.இதையடுத்து இவ்வழக்கில் தொடா்புடைய வேப்பங்குறிச்சியைச் சோ்ந்த விஜய்யை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 4 காா்கள், 1 டிராக்டா், 1 சிறிய சரக்கு வாகனம் (டாடா ஏஸ்) என மொத்தம் 6 வாகனங்கள் மீட்கப்பட்டன

மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள விஜயசுந்தா் (37), ஊ.மங்கலம் ஜெயபால் (40), மயிலாடுதுறை சதீஷ்குமாா் (28), சேப்ளாநத்தம் ஜெயராஜ் (36) ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.