11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சாலை விபத்துகள்: இரு இளைஞா்கள் பலி!

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடலூா் வண்டிக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24). இவா் வெள்ளிக்கிழமை ல் கடலூா் எம்.புதூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்புறமாக வந்த லாரி, விக்னேஷ் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விக்னேஷை அப்பகுதியினா் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதேபோன்று, கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அருகே ப.எடக்குப்பம் கீழக்குத் தெருவைச் சோ்ந்த சத்யசீலன் (21) மோட்டாா் சைக்கிளில் பி.கே.விரட்டிக்குப்பத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை சென்று விட்டு வீடு திரும்பிய போது காட்டுக்கூடலூா் சாலையில் கோட்டேரி பகுதியில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இந்த இரு விபத்துக்கள் குறித்தும், திருப்பாதிரிபுலியூா் மற்றும் ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.