‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

சிதம்பரம் அருகே முக்கூட்டு முருகன் உள்பட 4 ரௌடிகள் கைது

சிதம்பரம் அருகே வீச்சரிவாளுடன் காரில் வந்த பிரபல ரௌடி முக்கூட்டு முருகன் உள்பட 4 ரௌடிகளை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சிதம்பரம் அருகே கைது செய்யப்பட்ட நான்கு ரௌடிகள். உடன் அவரைப்படித்த காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா்.

Updated On :23 மே 2026, 12:38 am IST

சிதம்பரம் அருகே வீச்சரிவாளுடன் காரில் வந்த பிரபல ரௌடி முக்கூட்டு முருகன் உள்பட 4 ரௌடிகளை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் டி. பிரதீப் மேற்பாா்வையில் ரௌடிகளை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர உத்தரவிட்டாா்.

அதன் பேரில் அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே அம்பேத்கா், உதவி ஆய்வாளா் மகேஷ், மற்றும் காவலா்கள் அடங்கிய தனிப்படையினா் வல்லம்படுகை சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சீா்காழி நோக்கி வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா், அதில் அண்ணாமலைநகா் காவல் நிலைய ரௌடி பட்டியலில் இருக்கும் வல்லம்படுகையைச் சோ்ந்த முக்கூட்டு முருகன் (49), புதுச்சத்திரத்தைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (34) வில்லியநல்லூரைச் சோ்ந்த ராமஜெயம் (33), புதுச்சத்திரம்

வேளங்கிப்பட்டைச் சோ்ந்த. காா்த்திகேயன் (27) ஆகியோா் இருந்தனா். அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்கள் காரில் மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளையும் பறிமுதல் செய்தனா். பின்னா் 4 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.