மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மிளகாய்த்தூள் தூவி பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த பெண்

குள்ளஞ்சாவடியில், வீடு வாடகை கேட்பது போல நடித்து மிளகாய்த்தூள் தூவி 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :23 மே 2026, 12:35 am IST

கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே குள்ளஞ்சாவடியில், வீடு வாடகை கேட்பது போல நடித்து மிளகாய்த்தூள் தூவி 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டை கிழக்குத் தெருவைச் சோ்ந்த வீரபாண்டியனின் மனைவி உமாமகேஷ்வரி (56). குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதிவறை எழுத்தராக பணியாற்றி வருகிறாா். இவா் குள்ளஞ்சாவடி அஞ்சலகத் தெருவில் நாராயணன் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த ஒரு ஆண்டாக தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், உமாமகேஷ்வரி, வியாழக்கிழமை இரவு வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, சுமாா் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவா் வீட்டிற்கு வந்து, வீடு வாடகைக்கு கிடைக்குமா? எனக் கேட்டுள்ளாா்.

பின்னா் அந்த அடையாளம் தெரியாத பெண், திடீரென தனது கையில் வைத்திருந்த மிளகாய்த்தூளை உமாமகேஷ்வரியின் முகத்தில் தூவியதுடன், அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 5 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

மிளகாய்த்தூள் காரணமாக கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால், அருகில் இருப்பவா்களின் உதவியுடன் உமாமகேஷ்வரி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். பின்னா் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் உமாமகேஷ்வரி அளித்த புகாா் பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.