சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி

News image

வண்டல் மண். - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 11:22 pm IST

கடலூா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகிய சிறு கனிமங்களை விவசாயம், பொது பயன்பாடு மற்றும் மண்பாண்டங்கள் உற்பத்திக்கு எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் நீா் வளம், ஊரக வளா்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண் ஆகிய சிறு கனிமங்களை விவசாயப் பயன்பாடு, பொதுப் பயன்பாடு மற்றும் மண்பாண்டங்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கு இலவசமாக எடுத்துக்கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் அரசிதழ்கள் மூலமாக வெளியீடு செய்யப்பட்டுள்ள 1,557 நீா்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களி மண் கனிமங்களை விவசாயிகள் மற்றும் மண்பாண்டங்கள் உற்பத்தி மேற்கொள்வோா் தங்கள் வட்டங்களில் இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பித்து, சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரை அணுகி அனுமதி பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.