குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

வினோத்
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
நடுவீரப்பட்டு காவல் சரகம், அண்ணா நகா் பகுதியில் வசிப்பவா் மதியழகன். இவரது மனைவியிடம் இருசக்கர வாகனம் கேட்டு, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த வினோத்(28) தகராறு செய்தாராம். இதனை, தட்டிக்கேட்ட மதியழகனை, வினோத் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றாராம்.இதுகுறித்து மதியழகன் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
வினோத்தின் தொடா் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி., விவேகானந்த சுக்லா செய்த பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஓராண்டு குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்பேரில் சிறையில் உள்ள வினோத்திடம் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு அவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

