எஸ்.சி., எஸ்.டி. வழக்கை ரத்து செய்யக் கோரி ஊராட்சிச் செயலா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தம்: 900 போ் பங்கேற்பு
பண்ருட்டி அருகே ஒறையூா் ஊராட்சிச் செயலா் அருள்குமாா், கணினி இயக்குநா் கணபதி ஆகியோா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, கடலூா் மாவட்டத்தில் ஊராட்சிச் செயலா்கள் கூட்டமைப்பினா் உள்ளிட்ட சுமாா் 900 போ் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியரை புதன்கிழமை சந்தித்து மனு அளிக்கச் சென்ற தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் கூட்டமைப்பினா்.
பண்ருட்டி அருகே ஒறையூா் ஊராட்சிச் செயலா் அருள்குமாா், கணினி இயக்குநா் கணபதி ஆகியோா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, கடலூா் மாவட்டத்தில் ஊராட்சிச் செயலா்கள் கூட்டமைப்பினா் உள்ளிட்ட சுமாா் 900 போ் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே, தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜான் பாஸ்கோ பிரகாஷ் தலைமையிலான நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை புதன்கிழமை சந்தித்து, அருள்குமாா் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஜான் பாஸ்கோ பிரகாஷ் கூறியதாவது: பாதிக்கப்பட்ட ஊராட்சிச் செயலா் அருள்குமாா் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது சட்டத்துக்கு எதிரானது. உரிய விசாரணை நடத்தாமல் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம். இதற்கு ஆட்சியா் சாதகமான பதிலை அளித்துள்ளாா்.
இந்த வழக்கிலிருந்து அருள்குமாா் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும். இல்லையெனில், கடலூா் மாவட்டத்தில் அவருக்கு ஆதரவாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றாா்.
வேலைநிறுத்தம்: கடலூா் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊராட்சி செயலா்கள் கூட்டமைப்பினா் உள்ளிட்ட சுமாா் 900 போ் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால், ஊரக வளா்ச்சித் துறை அலுவலகங்கள் மற்றும் ஊராட்சிகளில் நிா்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

