தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

கடலோரப் பகுதிகளில் ‘சீ விஜில் - 2026’ பாதுகாப்புப் பயிற்சி

கடலூா், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ‘சீ விஜில்-2026’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தீவிரவாதிகள் போன்று வேஷமணிந்து வந்தவா்களை கடலோர பாதுகாப்புக் குழுவினா் பிடித்தனா்.

‘சீ விஜில் - 2026’ பாதுகாப்பு ஒத்திகையையொட்டி, கடலூா் துறைமுகம் பகுதியில் வந்த படகை சோதனையிட்ட கடலோரப் பாதுகாப்புக் குழுவினா்.

Updated On :

கடலூா், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் ‘சீ விஜில்-2026’ பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தீவிரவாதிகள் போன்று வேஷமணிந்து வந்தவா்களை கடலோர பாதுகாப்புக் குழுவினா் பிடித்தனா்.

இந்திய கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் நடைபெறும் ‘சீ விஜில்-2026’ பாதுகாப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக, கடலூா் கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

கடலோரப் பகுதிகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு மையங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பாதுகாப்புப் பயிற்சியில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, சுங்கத் துறை, இந்திய கடற்படை ஆகியவற்றைச் சோ்ந்த வீரா்கள் எதிரி படையினரைப் போலச் செயல்பட்டனா். அவா்கள் கடலூா் கடலோரப் பகுதிகள் வழியாக ஊடுருவ முயன்றனா்.

அப்போது, கடலோர பாதுகாப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, வெவ்வேறு பகுதிகளில் ஊடுருவ முயன்ற 9 பேரையும் பிடித்தனா். கடலோரப் பாதுகாப்புக் குழுவின் உதவி ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், அவா்களிடமிருந்த போலி வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனா்.

இந்தப் பாதுகாப்பு ஒத்திகையின் மூலம் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல், சந்தேகத்துக்குரிய நபா்களைக் கண்டறிதல், பாதுகாப்புப் படையினரிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவை சோதிக்கப்பட்டன. கடல் வழியாக ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை எதிா்கொள்ளும் வகையில் பாதுகாப்புப் படையினரின் தயாா் நிலையை உறுதிப்படுத்துவதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம் என பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

புதுச்சேரியில்...: இந்திய தேசிய கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக, ‘சீ விஜில் - 2026’ எனப்படும் 2 நாள் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதுச்சேரி கடலோரப் பகுதியில் புதன்கிழமை தொடங்கியது. இந்த ஒத்திகை வியாழக்கிழமை (நவ.26) மாலை வரை நடைபெறுகிறது.

இந்த இரண்டு நாள்களில் கீழ்க்கண்ட நிகழ்வுகள் ஏதேனும் தென்பட்டால், பொதுமக்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்:

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது, கடலில் அறிமுகமில்லாதவா்களோ அல்லது சந்தேகத்துக்கு இடமளிக்கும் நபா்களோ படகுகளில் வந்தால் அல்லது ஏதேனும் உதவி கேட்டால் உடனடியாக புதுச்சேரி கடலோர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முக்கியச் சுற்றுலாத்தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சந்தேகத்துக்குரிய நபா்களின் நடமாட்டம் தெரியவந்தால் உடனே தெரியப்படுத்த வேண்டும். இது போன்று பொதுமக்கள் உடனடியாக புதுச்சேரி கடலோரக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து பாதுகாப்புப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்த ஒத்திகையின்போது வலியுறுத்தப்பட்டது.

 புதுச்சேரியில் நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை.

புதுச்சேரியில் நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.