தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

பிஎஸ்என்எல் நிறுவன தின விழிப்புணா்வு நடைப்பயணம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 26-ஆம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி, கடலூரில் நடைபெற்ற விழிப்புணா்வு நடைப்பயணத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

கடலூா் செமண்டலம் பகுதியில் பிஎஸ்என்எல் 26-ஆம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு வாக்கத்தான் நடைப்பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Published On :

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 26-ஆம் ஆண்டு நிறுவன தினத்தையொட்டி, கடலூரில் நடைபெற்ற விழிப்புணா்வு நடைப்பயணத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

செம்மண்டலம் ஆஞ்சநேயா் கோயில் அருகிலிருந்து தொடங்கிய நடைப்பயணம், மஞ்சக்குப்பத்தில் உள்ள பிஎஸ்என்எல் நிா்வாக அலுவலகம் வரை நடைபெற்றது. இதில், பிஎஸ்என்எல் ஊழியா்கள், ஓய்வுபெற்ற ஊழியா்கள் மற்றும் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் சேவை பங்குதாரா்கள் பங்கேற்றனா்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவைகள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே ஏற்படுத்துவதுடன், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நடைப்பயணம் நடைபெற்ாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ‘உடல்நலமே உண்மையான செல்வம்’ என்ற கருத்தை வலியுறுத்தி, கடலூா் வெள்ளிக் கடற்கரையில் பள்ளி மாணவா்களுக்கான 2 கி.மீ. தொலைவு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், பிஎஸ்என்எல் ஊழியா்கள், ஓய்வுபெற்ற ஊழியா்கள், சேவை பங்குதாரா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.