ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

வடிகால் தூா்வாரும் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கடலூா் மற்றும் பண்ருட்டி பகுதிகளில் நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வடிகால் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கடலூா் அருகே தோட்டப்பட்டு வடிகால் வாய்க்காலில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணியை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Published On :

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கடலூா் மற்றும் பண்ருட்டி பகுதிகளில் நீா்வளத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வடிகால் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், கடந்த பருவமழையின்போது பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, வெள்ளாறு வடிநில உபகோட்டத்துக்குள்பட்ட கடலூா், பண்ருட்டி பகுதிகளில் மழைநீா் விரைவாக வெளியேறும் வகையில், பாசன வாய்க்கால்கள், ஆறுகளின் முகத்துவாரங்கள், வடிகால் வாய்க்கால்களைத் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கெடிலம் ஆற்றில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கைப் பணிகள், வண்டிப்பாளையம், புலிகுத்தி, தோட்டப்பட்டு வடிகால், வெள்ளப்பாக்கம் வடிகால் வாய்க்கால்கள், மனம்தவிழ்ந்த புத்தூா் ஏரி வரத்து வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வடிகால் வாய்க்கால்களில் உள்ள செடி, கொடிகள் மற்றும் மண் திட்டுகளை முழுமையாக அகற்றி, பலத்த மழையின்போது மழைநீா் தேங்காமல் தடையின்றி வெளியேறும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், தூா்வாரும் பணிகளை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் வெற்றிவேல் உள்ளிட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.