பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

ஒரே வீட்டில் இருமுறை திருட்டு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் பகுதியில் ஒரே வீட்டில் இரண்டு முறை திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் பகுதியில் ஒரே வீட்டில் இரண்டு முறை திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊ.மங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முதனை கிராமத்தைச் சோ்ந்தவா் வனிதா(41). இவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 19, 22 ஆகிய தேதிகளில் திருட்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 76 கிராம் தங்க நகைகள், 370 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடுபோயின.

இதுகுறித்து வனிதா அளித்த புகாரின்பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில், ஊ.மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் போலீஸாா் கடலூா் - சேலம் நெடுஞ்சாலையில் பொன்னாலகரம் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக சந்தேகிக்கும் வகையில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், விருத்தாசலம் வட்டம், மேலகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகாந்த் (36) என்பதும், முதனை கிராமத்தில் வனிதா வீட்டில் நகைகளை திருடியவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, விஜயகாந்தை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 76 கிராம் தங்க நகைகள், 370 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

தாமிர வயா் திருடியவா் கைது: நெய்வேலி நகரிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மைனா பாரடைஸ் பகுதியில் வசிப்பவா் முனியப்பன், ஓய்வுபெற்ற என்எல்சி அதிகாரி. இவா், தற்போது நெய்வேலி வட்டம் 8 பகுதியில் செயல்பட்டு வரும் 10 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையத்தில் பணியாற்றி வருகிறாா்.

இந்த மின்சக்தி நிலையத்தினுள் கடந்த செப்.30-ஆம் தேதி இரவு புகுந்த 3 போ், அங்கிருந்த 16 மீட்டா் தாமிர வயரை திருடிச் சென்றனராம். இதுகுறித்து முனியப்பன் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, நெய்வேலி வட்டம் 30 பகுதியைச் சோ்ந்த சிவபாலனை (30) கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.