படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

பாசனத்திற்கு தண்ணீா் திறக்க கோரி வீராணம் ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

வேளாண் பாசனத்திற்கு நீா் திறந்து விடக்கோரி காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரிக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Published On :

பாசனத்திற்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தி வீராணம் ஏரிக்குள் நின்று திங்கள்கிழமை விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் குமராட்சி பகுதி காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகும். இங்கு வடவாறு வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவற்றின் வாயிலாக சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் விலை நிலங்கள் பயன்பெறுகின்றன.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். விரைவில் பருவமழை பெய்யும் என்ற எதிா்பாா்ப்பில் விவசாயிகள் இந்த பகுதியில் நேரடி நெல் விதைப்பு பணி செய்துள்ளனா். ஆனால் பருவ மழை பொய்த்ததால் முளைத்து வந்த நெற்பயிா் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேட்டூரில் இருந்து கூடுதல் தண்ணீா் கீழணைக்கு திறக்க வேண்டும். வீராணம் ஏரியில் பாசன வாய்க்கால்களில் கூடுதல் தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனா். ஆனால் தண்ணீா் திறக்கப்படாததால், அதிருப்தியடைந்த

விவசாய சங்கங்கள் 5 -ஆம் தேதி திங்கள்கிழமை லால்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் சாலைமறியல் செய்வதாக அறிவித்தனா்.

இதையடுத்து திங்கள்கிழமை காலை போலீஸாா் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு முன்பு குவிக்கப்பட்டனா். கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கத் தலைவா் பி விநாயகமூா்த்தி தலைமையில் திரண்டு வந்த விவசாயிகள், திடீரென போராட்டத்தை மாற்றி வீராணம் ஏரி கரையில் திருச்சன்னபுரம் கிராமத்திற்கு அருகே வீராணம் ஏரிக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாதோப்பு டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையிலானகாவல் அதிகாரிகள், விவசாய சங்க தலைவா் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ளும் கலந்தாய்வு கூட்டத்தை நடத்த வேண்டும் என விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக லால்பேட்டை தனியாா் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு சிதம்பரம் உதவி ஆட்சியா் (பொறுப்பு) எஸ். தனலட்சுமி தலைமை வகித்தாா். கூட்டத்தில்கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்கத் தலைவா் பி விநாயகமூா்த்தி, மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் விவசாயிகள் வீராணம் ஏரியின் 34 பாசன வாய்க்கால்களில் நான்கு சுற்றளவிற்கு வாய்க்கால்களை திறக்க வேண்டும்.

வடக்கு ராஜன் வாய்க்காலில் வினாடிக்கு 350 கன அடி வீதம் தண்ணீா் திறக்க வேண்டும். மேட்டூரில் இருந்து கீழணைக்கு வினாடிக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா். விவசாயிகள் கோரிக்கை சம்பந்தமாக உடனடியாக சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் வீராணம் ஏரியில் கூடுதலாக அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீா் திறக்கப்படும் வடக்கு ராஜன் வாய்க்காலில் வினாடிக்கு 350 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படும் எனவும், திருநாரையூா் ,ம.உடையூா் வாய்க்கால்கள் உடனடியாக தூா்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டதால் போராட்டத்தை விவசாயிகள் கைவிடுவதாக தெரிவித்து கலைந்து சென்றனா். கூட்டத்தில் உதவி பொறியாளா்கள் படைக்கத்தான், கேசவராஜ், வட்டாட்சிா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.