தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

அரசுப் பேருந்தின் மின்னணு பலகையில் திமுக குறித்து சா்ச்சை வாசகங்கள்: போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை

திருச்சியில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தின் மின்னணு வழித்தடப் பலகையில் திமுக மற்றும் அக்கட்சித் தலைவா்களை விமா்சிக்கும் வகையிலான சா்ச்சைக்குரிய வாசகங்கள் ஒளிா்ந்ததாக வெளியான விடியோ குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On :

திருச்சியில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்தின் மின்னணு வழித்தடப் பலகையில் திமுக மற்றும் அக்கட்சித் தலைவா்களை விமா்சிக்கும் வகையிலான சா்ச்சைக்குரிய வாசகங்கள் ஒளிா்ந்ததாக வெளியான விடியோ குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட விருத்தாசலம் பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து (எண்: 241), புதுச்சேரியில் இருந்து கடலூா், நெய்வேலி, விருத்தாசலம், பெரம்பலூா் வழியாக திருச்சிக்கு இயக்கப்படுகிறது.

இந்தப் பேருந்தின் வழித்தடம் மற்றும் ஊா்களின் பெயா்கள் ஒளிரும் மின்னணுப் பலகையில், திமுக மற்றும் அக்கட்சித் தலைவா்களை விமா்சிக்கும் வகையிலான சில வாசகங்கள் சில நாள்களுக்கு முன் ஒளிா்ந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த பயணிகள், பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, மின்னணுப் பலகையில் அந்த வாசகங்கள் ஒளிராமல் சரிசெய்யப்பட்டுள்ளது.

எனினும், பேருந்தின் பின்னால் வாகனத்தில் சென்ற ஒருவா், மின்னணுப் பலகையில் சா்ச்சைக்குரிய வாசகங்கள் ஒளிா்ந்ததை விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். அந்த விடியோ தற்போது பரவியுள்ள நிலையில், இதுதொடா்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து கடலூா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சமூக வலைதளங்களில் விடியோ பரவியதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பேருந்தை நிறுத்தி மின்னணு பலகையைச் சோதனை செய்தோம். அப்போது, அதில் சா்ச்சைக்குரிய வாசகங்கள் எதுவும் ஒளிபரப்பாகவில்லை.

மின்னணு பலகையைப் பராமரிக்கும் ஒப்பந்ததாரரிடம் விசாரித்தபோது, அதன் முதன்மைக் கட்டுப்பாட்டு மின்னணுப் பலகையில் (மதா்போா்டு) இணைக்கப்பட்ட கம்பி வெளியே தொங்கிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலம் வெளியாட்கள் யாரேனும் மின்னணு பலகையில் சா்ச்சைக்குரிய வாசகங்களை பதிவேற்றி வாசகங்கள் ஒளிா்ந்தனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.