புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 1340 போ் தோ்வு

கடலூா் சி.கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 3,719 வேலை நாடுநா்கள் பங்கேற்ற நிலையில், 1340 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் பணி நியமன ஆணை பெற்றவா்கள்.

Published On :

கடலூா் சி.கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 3,719 வேலை நாடுநா்கள் பங்கேற்ற நிலையில், 1340 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் சி.கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் 218 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு பணியிடங்களுக்கு வேலை நாடுநா்களைத் தோ்வு செய்தன.

முகாமில் 3,719 வேலைநாடுநா்கள் பங்கேற்ற நிலையில், 1340 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். மேலும், 88 மாற்றுத்திறனாளிகள் உள்பட 312 போ் இரண்டாம் கட்ட நோ்காணலுக்கு தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது: வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்கும் தனியாா் நிறுவனங்களின் வாய்ப்புகளை இளைஞா்கள் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுப் பயனடைய வேண்டும். கிடைத்த வேலைவாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். இளம் வயதிலேயே வேலைவாய்ப்பைப் பெற்று, தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கு. சுந்தரவள்ளி, கல்லூரி முதல்வா் முனைவா் ரா. கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.