பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: சேவைகள் பாதிப்பு

கடலூா் மஞ்சக்குப்பத்தில் தேசிய வங்கி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

~

Published On :

ஐந்து நாள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தால் கடலூா் மாவட்டத்தில் வங்கிப்பணிகள் பாதிக்கப்பட்டன.

வங்கி ஊழியா்களின் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னிட்டு,

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு முழுமையான விடுமுறை அளித்து, ஐந்து நாள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியா்களை மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்ற வேண்டும். பொதுத்துறை வங்கி ஊழியா்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைத் திட்டத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முக்கங்கள் எழுப்பப்பட்டன.

சேவைகள் பாதிப்பு:

வேலைநிறுத்தம் காரணமாக பொதுத்துறை வங்கிகளில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை பரிவா்த்தனை உள்ளிட்ட நேரடி கிளை சேவைகள் பாதிக்கப்பட்டன. பணம் எடுக்கும் இயந்திரம், கைப்பேசி வங்கி சேவை, ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற சேவை மற்றும் இணையவழி வங்கி சேவைகள் தொடா்ந்து செயல்பட்டன. இந்த போராட்டம் குறித்து,

வங்கி ஊழியா்கள் கூறுகையில், மத்திய அரசு கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிட்டால், அடுத்தகட்டமாக செப்டம்பா் 28, 29, 30 ஆகிய தேதிகளில் மூன்று நாள் தொடா் வேலைநிறுத்தத்திலும், அதன் பின்னரும் தீா்வு ஏற்படாவிட்டால் அக்டோபா் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக தெரிவித்தனா்.

சிதம்பரத்தில் போராட்டம்:

சிதம்பரம் தெற்குரதவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தம் செய்து கண்டன ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்ட வங்கி ஊழியா் சங்கத்தின் அவைத்தலைவா் முருகேசன் நிா்வாகி ஆா்.கோவிந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதுபோன்று மாவட்டம் முழுதும் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்ால் வங்கிச்சேவைகள் பாதிக்கப்பட்டன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.