பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பூக்கடை தொழிலாளி கொலை: பெண் உள்ளிட்ட 5 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பூக்கடை தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக பெண் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பூக்கடை தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக பெண் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டியை அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி (45). இவரது சகோதரி கன்னியாகுமரி

கீழ்கவரப்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறாா். இவா்களுக்குள் குடும்பப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் விநாயகா் சிலையை கரைக்க மூா்த்தி மகன் விக்னேஷ், கன்னியாகுமரி மகன் தேவ் ஆகியோா் சென்றனா். அங்கு, இருவருக்கும் இடையே ஏற்கெனவே உள்ள முன் விரோதம் காரணமாக வாய்த் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து நியாயம் கேட்க விக்னேஷ், அவரது தந்தை மூா்த்தி உள்ளிட்டோா் கீழ்கவரப்பட்டில் உள்ள கன்னியாகுமரி வீட்டுக்குச் சென்றனா். அங்கு, இரு குடும்பத்தினா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்னையை கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பூக்கடை தொழிலாளியான ராமு (45) விலக்கிவிட்டாா். அப்போது, மூா்த்தி (45), அவரது மனைவி அம்பிகா (42), மகன் விக்னேஷ் (24), மேல்கவரப்பட்டைச் சோ்ந்த சிவா (24), அப்பதுல் பாரித்கான் (24), மு.விக்னேஷ் (24), ஸ்ரீதா் உள்ளிட்டோா் தாக்கியதில், ராமு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூா்த்தி, விக்னேஷ், சிவா, அப்துல் பாரித்கான், அம்பிகா ஆகியோரை கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.