பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

வீடு புகுந்து நகைகள் திருட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 8 பவுன் நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

சித்திரிப்பு

Published On :

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 8 பவுன் நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், நடுக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவா் அலெக்ஸ் பாண்டியன்(46), நெய்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை காலை மனைவி மற்றும் மகளுடன் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலுக்குச் சென்றிருந்தாா்.

பின்னா், பிற்பகல் 2.30 மணி அளவில் வீடு திரும்பினாா். அப்போது, வீட்டின் பின்பக்கக்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக்கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

உள்ளே சென்று பாா்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் நகைகள், கால் கிலோ வெள்ளிப் பொருள்களை மா்மநபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.